நடிக்க வரவில்லை என்றால்... - நிதி அகர்வால்
|நான் நடிக்க வராமல் போயிருந்தால் பேஷன் டிசைனிங் படித்திருப்பேன் என நடிகை நிதி அகர்வால் அளித்த ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
சிம்பு ஜோடியாக 'ஈஸ்வரன்', ஜெயம் ரவி ஜோடியாக 'பூமி' போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நிதி அகர்வால். இவர் தெலுங்கிலும் ஓரிரு படங்கள் நடித்திருக்கிறார்.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிதி அகர்வாலிடம், 'நடிக்க வரவில்லை என்றால் என்ன செய்திருப்பீர்கள்?' என்று கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்து அவர் பேசியதாவது:-
"சினிமா எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. எனக்கு நடிப்பு வரவில்லை என்றால், வேறு ஏதாவது வேலைக்கு போ என்று எனது குடும்பத்தினர் சொல்லியிருப்பார்கள். ஒருவேளை நான் நடிக்க வராமல் போயிருந்தால் பேஷன் டிசைனிங் படித்திருப்பேன். அதன் பின்னணியில் புதிய தொழில் தொடங்கியிருப்பேன். ஆடை அலங்கார பொருட்களில் ஒரு புதுமையை ஏற்படுத்தி இருப்பேன். நிச்சயமாக எனது குடும்பத்தினரும் முழு ஒத்துழைப்பை அளித்திருப்பார்கள்."
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழில் 2 படங்கள் மட்டுமே நடித்துள்ள நிதி அகர்வாலுக்கு சென்னையை அடுத்த காட்டுப்பாக்கம் பகுதியில் ரசிகர்கள் கோவில் கட்டி வருவது குறிப்பிடத்தக்கது.