< Back
சினிமா செய்திகள்
காதலிப்பதாக தொல்லை: இளைஞர் மீது நித்யாமேனன் புகார்
சினிமா செய்திகள்

காதலிப்பதாக தொல்லை: இளைஞர் மீது நித்யாமேனன் புகார்

தினத்தந்தி
|
8 Aug 2022 6:11 PM IST

முகநூல் பக்கத்திலும் தனக்கு எதிராக அவதூறு பதிவுகளை வெளியிட்டு உள்ளார் கேரளாவை சேர்ந்த சந்தேஷ் வர்க்கி என்று நித்யாமேனன் கூறியுள்ளார்.

View this post on Instagram

A post shared by Nithya Menen (@nithyamenen)

தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் நித்யா மேனன் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக சமீபத்தில் இணைய தளங்களில் தகவல் பரவியது. இதனை நித்யா மேனன் மறுத்தார். கேரளாவை சேர்ந்த சந்தேஷ் வர்க்கி என்ற இளைஞர்தான் திருமண வதந்தியை பரப்பியதாக கூறப்படுகிறது. அந்த இளைஞர் நித்யாமேனனை காதலிப்பதாகவும் அவரை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் பேட்டி அளித்து இருந்தார்.

இதுகுறித்து நித்யாமேனன் கூறும்போது, ''அந்த இளைஞர் விருப்பத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். முகநூல் பக்கத்திலும் எனக்கு எதிராக அவதூறு பதிவுகளை வெளியிட்டு உள்ளார். அவர், கடந்த ஆறு வருடங்களாக பல்வேறு எண்களில் இருந்து பேசி எனக்கு தொல்லை கொடுத்து வருகிறார். அவருடைய 30 எண்களை நான் 'பிளாக்' செய்து இருக்கிறேன். ஆனாலும் வெவ்வேறு எண்களில் இருந்து பேசி தொடர்ந்து தொல்லை கொடுக்கிறார். என் அப்பா, அம்மாவையும் போனில் தொடர்பு கொண்டு தொந்தரவு செய்கிறார். அவர் மீது போலீசில் புகார் அளிக்கும்படி பலர் என்னிடம் வலியுறுத்தி வருகிறார்கள்'' என்றார்.

மேலும் செய்திகள்