'இடியன் சந்து' படத்தின் டீசர் வெளியீடு
|நடிகர் விஷ்ணு உன்னிகிருஷ்ணன் நடிக்கும் 'இடியன் சந்து' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
சென்னை,
மலையாளத்தில் 'குட்டநாடன் மார்ப்பா', 'மார்கம்களி' ஆகியவை படங்களை இயக்கி ரசிகர்களை ஈர்த்தவர் ஸ்ரீஜித் விஜயன். தற்போது ஹேப்பி புரொடக்சன்ஸ் கீழ் ஷபீக் சுபைர், ரயீஸ், விஷ்ணு உன்னிகிருஷ்ணன் மற்றும் ஸ்ரீ விஜயன் ஆகியோர் இணைந்து 'இடியன் சந்து' படத்தை தயாரித்துள்ளனர். இந்தப்படத்தில் நடிகர் விஷ்ணு உன்னிகிருஷ்ணன் கதாநாயகனாக நடிக்கிறார். தீபக் தேவ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
மேலும் இந்தப்படத்தில் லீனா, ரமேஷ் பிஷாரடி, ஜெயஸ்ரீ சிவதாஸ், லாலு அலெக்ஸ், பிஜு சோபானம் மற்றும் சூரஜ் தெலக்காட் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த டீசர் பள்ளியில் நடைபெறும் சம்பவங்களை அடிப்படையாக கொண்டதாக அமைந்துள்ளது.
மேலும், உள்ளூர் கும்பலுடன் சந்துவிற்கு ஏற்படும் மோதல் காட்சிகள் இடம் பிடித்துள்ளன. எனவே இந்தப்படம் அதிரடி படமாக அமையும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். மேலும் இந்தப்படம் வருகிற 19-ந் தேதி வெளியாகும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.