< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
என் மனதுக்கு பிடித்தவர் கிடைத்தவுடன் 2-வது திருமணம் செய்து கொள்வேன்- விஜய் சேதுபதி பட நடிகை
|16 March 2024 3:00 AM IST
தனது விவாகரத்து குறித்தும் மறுமணம் குறித்தும் நடிகை நிஹாரிகா பேட்டியில் கூறியுள்ளார்.
தமிழில் விஜய்சேதுபதியுடன் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தில் நடித்து பிரபலமானவர் நிஹாரிகா. தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறார். இவர் கடந்த 2020-ம் ஆண்டு சைதன்யா என்பவரை திருமணம் செய்தார். பின்னர் அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த வருடம் விவாகரத்து பெற்று பிரிந்தார்.
தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கி உள்ளார். புதிய தமிழ் படமொன்றில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார். இந்த நிலையில் நிஹாரிகா 2-வது திருமணத்துக்கு தயாராவதாக வலைத்தளத்தில் தகவல் பரவி வருகிறது.
இதுகுறித்து நிஹாரிகா அளித்துள்ள பேட்டியில், "எனக்கு குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும். குழந்தை பெற்றுக்கொள்ள ஆசையாக இருக்கிறது. எனவே மீண்டும் திருமணம் செய்து கொள்வேன். என் மனதுக்கு பிடித்தவர் கிடைத்தவுடன் 2-வது திருமணம் செய்து கொள்வேன்'' என்றார்.