< Back
சினிமா செய்திகள்
ஐ.ஏ.எஸ். அதிகாரியாக விரும்பிய ராஷிகன்னா
சினிமா செய்திகள்

ஐ.ஏ.எஸ். அதிகாரியாக விரும்பிய ராஷிகன்னா

தினத்தந்தி
|
5 July 2022 12:07 PM IST

ராஷிகன்னா ஐ.ஏ.எஸ் அதிகாரியாக வேண்டும் என்று கனவு கண்டதாக தெரிவித்து உள்ளார். இதுகுறித்து ராஷிகன்னா அளித்துள்ள பேட்டியில்,

தமிழில் இமைக்கா நொடிகள், அடங்க மறு, அயோக்யா, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார் படங்களில் நடித்து பிரபலமான ராஷிகன்னா தற்போது தனுஷ் ஜோடியாக திருச்சிற்றம்பலம், கார்த்தியுடன் சர்தார் படங்களில் நடித்து முடித்துள்ளார். தெலுங்கிலும் முன்னணி கதாநாயகியாக உள்ளார்.

கதாநாயகிகள் பலர் வழக்கமாக டாக்டராக ஆசைப்பட்டு நடிகையாகி விட்டேன் என்று சொல்வது உண்டு. ஆனால் ராஷிகன்னா ஐ.ஏ.எஸ் அதிகாரியாக வேண்டும் என்று கனவு கண்டதாக தெரிவித்து உள்ளார். இதுகுறித்து ராஷிகன்னா அளித்துள்ள பேட்டியில், ''நான் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் எதிர்பாராமல் நடிகையாகி விட்டேன். கடவுள் எனது தலையெழுத்தை முடிவு செய்து சினிமாக்களில் கொண்டு வந்து நிலைநிறுத்தி விட்டார். எந்த ஒரு பின்னணியும் இல்லாமல் சினிமா துறைக்கு வந்து கதாநாயகியாகி இவ்வளவு பெயரும், புகழும் பெற்று இருப்பது கடவுளின் தயவினால்தான்.

ஒரு காலத்தில் நான் கனவு கண்ட ஐ.ஏ.எஸ். அதிகாரியை விட கதாநாயகி ஆனது நல்லதுதான் என்று நினைக்கின்றேன். ஐ.ஏ.எஸ். ஆகி பொது மக்களுக்கு தொண்டு செய்யலாம் என நினைத்தேன். இப்போது கதாநாயகி ஆன பிறகும் கூட பொதுமக்களுக்கு சேவை தான் செய்கிறேன்" என்றார்.

மேலும் செய்திகள்