< Back
சினிமா செய்திகள்
நான் இவருடன் இணைந்து நடிக்க ஆசைப்படுகிறேன் - ஜெயம் ரவி
சினிமா செய்திகள்

'நான் இவருடன் இணைந்து நடிக்க ஆசைப்படுகிறேன்' - ஜெயம் ரவி

தினத்தந்தி
|
17 March 2024 11:11 AM IST

'எனக்கு இருக்கும் மிகச்சில நெருங்கிய நண்பர்களில் ஒருவர் தீரஜ்' என்று ஜெயம் ரவி கூறினார்.

சென்னை,

மீரா மகதி இயக்கியுள்ள 'டபுள் டக்கர்' படத்தில் தீரஜ், ஸ்ருமிதி வெங்கட் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். எம்.எஸ். பாஸ்கர், கோவை சரளா, யாஷிகா ஆனந்த், காளி வெங்கட், முனிஷ் காந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 8,000 மாணவர்கள் முன்னிலையில் பிரமாண்டமாக நடைபெற்றது. அதில் ஜெயம் ரவி, 'அயலான்' இயக்குநர் ரவிக்குமார் மேலும் படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர். அப்போது ஜெயம் ரவி பேசுகையில்,

"எனக்கு இருக்கும் மிகச்சில நெருங்கிய நண்பர்களில் ஒருவர் தீரஜ். அவருக்காக இங்கு வருவதற்கு மிகவும் மகிழ்ச்சி. அவர் சினிமாவில் நடிக்க ஆரம்பித்திருப்பது சந்தோஷம். நான் இவருடன் இணைந்து நடிக்க ஆசைப்படுகிறேன்.

'டபுள் டக்கர்' எனும் தலைப்பு இவருக்காகவே உருவானதுபோல் இருக்கிறது, ஏனென்றால் மருத்துவர், நடிகர் என்று இரண்டு பரிமாணங்களிலும் ஜொலித்துக் கொண்டிருப்பவர் தீரஜ். வித்யாசாகர் அவர்களின் இசைக்கு சிறு வயதில் இருந்தே நான் ரசிகன். அவர் இந்த படத்திற்கு இசையமைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சி. இளைஞர்களுடன் இணைந்து அவர் பணியாற்றியுள்ளார். அவரது இசை இந்த படத்திற்கு கட்டாயம் பெரிய பக்கபலமாக இருக்கும்." என்றார்.

மேலும் செய்திகள்