< Back
சினிமா செய்திகள்
கதைகளை நடிகர்களிடம் சொல்ல மாட்டேன் - டைரக்டரின் பேச்சால் பரபரப்பு
சினிமா செய்திகள்

'கதைகளை நடிகர்களிடம் சொல்ல மாட்டேன்' - டைரக்டரின் பேச்சால் பரபரப்பு

தினத்தந்தி
|
12 May 2024 7:18 AM IST

டைரக்டர் தமிழின் பேச்சு சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை,

'சேத்துமான்' படத்தை இயக்கிய இயக்குனர் தமிழ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'எலக்சன்' திரைப்படத்தில் விஜய்குமார், 'அயோத்தி' புகழ் பிரீத்தி அஸ்ராணி, ரிச்சா ஜோஷி, 'வத்திக்குச்சி' திலீபன், பாவெல் நவகீதன், ஜார்ஜ் மரியன், நாச்சியாள் சுகந்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எழுத்தாளர் அழகிய பெரியவன் வசனம் எழுதி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு மகேந்திரன் ஜெயராஜு ஒளிப்பதிவு செய்ய, கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார்.

நேற்று 'எலக்சன்' படத்தின் டிரைலர் வெளியானது . இதை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்டு படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்நிலையில், சென்னையில் நடந்த பட விழாவில் இயக்குனர் தமிழ் பங்கேற்று பேசும்போது,

" என் படத்தில் நடிக்கும் நடிகர்களை, நான் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க வைக்க மாட்டேன். அது என் கொள்கை. அதேபோல நான் எழுதும் கதைகளையும் நடிகர்களுக்கு சொல்லும் பழக்கம் இல்லை.

எனக்கு அந்தளவுக்கு கதை சொல்லவராது. கதைகளை எழுதி அனுப்பி வைப்பேன். பிடித்தால் நடிக்கட்டும். இல்லையென்றால் போகட்டும். கதைகளை யாரிடமும் சொல்ல நான் போகவும் மாட்டேன். இது எனது தனிப்பட்ட கொள்கை'', என்றார்.

டைரக்டர் தமிழின் இந்த பேச்சு சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் செய்திகள்