< Back
சினிமா செய்திகள்
இனி வில்லனாக நடிக்க மாட்டேன் - நடிகர் விஜய் சேதுபதி ஓபன் டாக்
சினிமா செய்திகள்

"இனி வில்லனாக நடிக்க மாட்டேன்" - நடிகர் விஜய் சேதுபதி ஓபன் டாக்

தினத்தந்தி
|
10 Jan 2024 5:33 PM IST

கவுரவ வேடத்தில் நடிக்க சொல்லி அணுகுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

சென்னை,

நடிகர் விஜய் சேதுபதி தற்போது இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். இதன் மூலம் அவர் பான் இந்தியா நடிகராக வலம் வருகிறார். தற்போது 'மெரி கிறிஸ்துமஸ்' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் தமிழ் மற்றும் இந்தியில் தயாராகி வருகிறது. இந்த படத்தை அந்தாதூன் படத்தை இயக்கி பிரபலமான ஸ்ரீராம் ராகவன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கேத்ரீனா கைப் நடித்துள்ளார். இந்த படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், சென்னையில் படத்தின் ப்ரோமோசன் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், இனிமேல் வில்லன் மற்றும் கவுரவ வேடங்களில் நடிக்கமாட்டேன். கவுரவ வேடத்தில் நடிக்க சொல்லி அணுகுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. நான் நடிக்க மறுத்த கவுரவ வேடமே 10 முதல் 20க்கு மேல் இருக்கும். கவுரவ வேடத்தில் நடிப்பதன் மீது வேறு ஒரு பார்வை இருந்தது. ஒரு நாள் அல்லது 2 நாட்கள் நாம் நடித்துக் கொடுப்பது அந்த படத்திற்கு பக்கபலமாக இருக்கும் என்று எண்ணி நடித்துக் கொடுத்தேன்.

வில்லனாக நடிக்கவும் நிறைய பேர் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். வரும் அனைத்து கதைகள் வில்லனாக சித்தரிப்பது போலவே வருகின்றன. எனவே அதற்கும் ஒரு முடிவு கட்டிவிட்டேன். இதனால்தான் கோவா அனைத்துலக திரைப்படம் விழாவுக்கு சென்றபோது வில்லனாக நடிப்பதை நிறுத்தி விட்டேன் என்று பகிரங்கமாக சொல்லிவிட்டேன், என்று கூறினார் .

மேலும் செய்திகள்