'இனி நடிக்க மாட்டேன்'-உதயநிதி ஸ்டாலின்
|மாமன்னன் படம் 50 நாட்கள் ஓடிய நிலையில் சென்னையில் நடந்த வெற்றி விழா நடைபெற்றது
தமிழில் பிரபல நடிகராக வலம் வந்த உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகி உள்ளார். அவர் கடைசியாக மாரிசெல்வராஜ் இயக்கத்தில் நடித்த மாமன்னன் படம் 50 நாட்கள் ஓடிய நிலையில் சென்னையில் நடந்த வெற்றி விழா நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அதில் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, "மாமன்னன் படத்தில் நடிக்கும்போதே வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருந்தது. வடிவேல் இந்த படத்தில் நடிக்க மறுத்து இருந்தால் படத்தை கைவிட்டு இருப்போம். அவரது கதாபாத்திரம் சிறப்பாக அமைந்தது.
நான் நடித்த முதல் படமான ஒரு கல் ஒரு கண்ணாடி பெரிய வெற்றி பெற்றது. அதுபோல் கடைசி படமான மாமன்னன் படமும் வெற்றி பெற்று இருக்கிறது.
மீண்டும் நான் நடிக்க வேண்டும் என்று பலர் விரும்பினாலும் இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டேன். இது ஏற்கனவே எடுத்த முடிவுதான். அதில் மாற்றம் இல்லை'' என்றார்..
வடிவேலு பேசும்போது, "எத்தனையோ படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து இருக்கிறேன். அத்தனை படங்களுக்கும் மொத்தமாக இந்த படம் எனக்கு பெரிய பெயர் வாங்கி கொடுத்து விட்டது'' என்றார்.