இந்த படத்தில் நடித்த அனுபவம் வாழ்நாள் முழுக்க மறக்க மாட்டேன் - நடிகர் அக்ஷய் குமார்
|இப்படத்தில் பிருத்விராஜ் சுகுமாரன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மும்பை,
அக்ஷய் குமார் - டைகர் ஷெராப் கூட்டணியில் உருவாகி இருக்கும் படே மியன் சோட்டே மியன் படத்தின் டிரைலர் வெளியானது. இப்படம் படே மியன் சோட்டே மியன் இடையிலான தோழமை மற்றும் அவர்களின் வாழ்க்கை பற்றி பேசும் படமாக இது உருவாகியுள்ளது.
தயாரிப்பாளர் ஜாக்கி பக்னானி மற்றும் இயக்குனர் அலி அப்பாஸ் ஜாபர் இணைந்து ரசிகர்களுக்கு புதுவித அனுபவம் கொடுக்கும் ஆக்ஷன் கலந்த விறுவிறுப்பான படத்தை எடுத்துள்ளனர். இப்படத்தின் மிக முக்கியமான ஆக்ஷன் காட்சிகள் எப்படி இருக்கும் என்பதை உணர்த்தும் வகையில் இப்படத்தின் டிரைலர் அமைந்துள்ளது.
இப்படத்தில் நடித்த அனுபவம் பற்றி பேசிய அக்ஷய் குமார், "ஆக்ஷன், காமெடி கலந்த கதையில் உண்மையான சண்டைகள் இப்படத்தை என் மனதுக்கு நெருக்கமான உணர்வை கொடுக்கிறது. இப்படத்தில் நான் முன்பைவிட அதிக திறமையை வெளிப்படுத்த முயற்சித்து இருக்கிறேன். அருமையான படக்குழு உடன் இணைந்து உண்மையான சண்டை காட்சிகளில் நடித்ததை என் வாழ்நாள் முழுதும் மறக்க மாட்டேன். இப்படத்தில் பணியாற்றியதை சிறப்பாக கருதுகிறோம். இதேபோன்று இப்படம் ரசிகர்களை மகிழ்விக்கும்," என்று அக்ஷய் குமார் தெரிவித்தார்.
இப்படத்தில் பிருத்விராஜ் சுகுமாரன் வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தி இருக்கிறது. இப்படம் ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியிடப்பட இருக்கிறது. ஏ.ஏ.இசட். பிலிம்ஸ் சார்பில் வாஷூ பக்னானி மற்றும் பூஜா என்டர்டெயின்மென்ட் இணைந்து படே மியன் சோட்டே மியனை வழங்குகின்றன. இந்த படத்தை அலி அப்பாஸ் ஜாபர் இயக்கியுள்ளார்.