< Back
சினிமா செய்திகள்
உங்கள் அன்பை என் இதயத்தில் வைத்திருப்பேன் - நடிகர் சிவராஜ் குமார் ட்வீட்
சினிமா செய்திகள்

'உங்கள் அன்பை என் இதயத்தில் வைத்திருப்பேன்' - நடிகர் சிவராஜ் குமார் ட்வீட்

தினத்தந்தி
|
13 Aug 2023 6:19 AM IST

'ஜெயிலர்' வெற்றிக்கு நன்றி தெரிவித்து நடிகர் சிவராஜ் குமார் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

பெங்களூரு,

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 'ஜெயிலர்' திரைப்படம் கடந்த 10-ந்தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் தென்னிந்திய முன்னணி நடிகர்களான மோகன்லால், சுனில், சிவராஜ் குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

மேலும் ஜாக்கி ஷெராப், தமன்னா, யோகிபாபு உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் 'ஜெயிலர்' திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சிவராஜ் குமார் படக்குழுவிற்கும், ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் 'உங்கள் அன்பை என் இதயத்தில் வைத்திருப்பேன்' என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்