'யுவன் சங்கர் ராஜா வாழ்க்கை படத்தை நான்தான் இயக்குவேன்' - டைரக்டர் இளன்
|யுவன்சங்கர் ராஜாவின் வாழ்க்கை சினிமா படமாக தயாராக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,
பிரபல இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா. இவரின் வாழ்க்கை சினிமா படமாக தயாராக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை பியார் பிரேமா காதல் மற்றும் தற்போது கவின் நடித்த ஸ்டார் படத்தை டைரக்டு செய்த இளன் இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இது குறித்து இளன் கூறும்போது, ''யுவன் சங்கர் ராஜாவின் வாழ்க்கையை படமாக்க அவரிடம் ஒரு வரியில் கதை சொல்லி இருக்கிறேன். அது அவருக்கு பிடித்து விட்டது. அவரின் வாழ்க்கை படத்தை நான்தான் டைரக்டு செய்வேன் என்று பேச்சுவார்த்தை மூலம் ஒப்பந்தமும் போட்டு இருக்கிறேன்.
யுவன் சங்கர் ராஜாவின் ஆரம்ப கால வாழ்க்கை சினிமா துறையில் அவரது வளர்ச்சி போன்ற அவரை சார்ந்த அனைத்து விஷயங்களும் படத்தில் இருக்கும்'' என்றார்.
இது யுவன் சங்கர் ராஜாவின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை சினிமா படமாவதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.