< Back
சினிமா செய்திகள்
நிச்சயம் விஜய்யுடன் இணைந்து படம் பண்ணுவேன்- டைரக்டர் வெற்றிமாறன் உறுதி!
சினிமா செய்திகள்

நிச்சயம் விஜய்யுடன் இணைந்து படம் பண்ணுவேன்- டைரக்டர் வெற்றிமாறன் உறுதி!

தினத்தந்தி
|
26 Jun 2023 3:21 PM IST

சென்னை நீலாங்கரை பகுதியில் தமிழகத்தில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு பரிசளித்து பாராட்டுக்களை தெரிவித்தார்.

சென்னை,

சமீபத்தில் நடிகர் விஜய் நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது வெற்றிமாறனின் அசுரன் திரைப்படத்தில் இடம்பெற்ற வசனம் ஒன்றை மேடையில் பேசியதற்காக அனைவராலும் பாராட்டப்பட்டார்.

சென்னை நீலாங்கரை பகுதியில் தமிழகத்தில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு பரிசளித்து பாராட்டுக்களை தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய், தனுஷின் அசுரன் படத்தில் இடம்பெற்ற கல்வியை மட்டும் நம்மகிட்ட இருந்து எடுத்துக்கவே முடியாது என்று தொடங்கினார். தொடர்ந்து வருங்கால வாக்காளர்கள் நீங்கள் தான். பணம் வாங்கிக்கொண்டு ஓட்டு போடும் கலாச்சாரத்தை நீங்கள் தான் மாற்ற வேண்டும். உங்கள் பெற்றோரிடம் சொல்லி பணம் வாங்காமல் ஓட்டு போட சொல்ல வேண்டும்.

மாணவர்களாகிய நீங்கள் வாழ்க்கையில் எந்த சூழ்நிலையிலும் தவறாக முடிவை எடுத்துவிட கூடாது. உங்கள் குணங்களை நீங்கள் மறந்துவிட கூடாது. அதேபோல் அம்பேத்கர், பெரியார், காமராஜர் ஆகியோரை படிக்க வேண்டும். அவர்கள் வாழ்க்கையின் முக்கியத்துவத்தை தெரிந்துகொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார். விஜய்யின் இந்த முதல் அரசியல் தொடர்பான பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்போது டைரக்டர் வெற்றிமாறன் விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார். விடுதலை 2 , வாடிவாசல், வடசென்னை 2 ஆகிய படங்களை முடித்த பின்பு நடிகர் விஜய்யுடன் டைரக்டர் வெற்றிமாறன் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட டைரக்டர் வெற்றிமாறன் வாடிவாசல்,வடசென்னை குறித்த தகவல்களை பகிர்ந்துகொண்டார். அப்போது நடிகர் விஜய்யை வைத்து படம் இயக்குவாரா என்கிற கேள்விக்கு பதிலளித்த வெற்றிமாறன்.

"நடிகர் விஜய்யும் நானும் இணைந்து படம் பண்ணுவது குறித்து நீண்ட நாட்களாக பேசி வருகிறோம்

அவரும் என் படத்தில் நடிக்க தயாராக உள்ளார். கைவசம் உள்ள படங்களை முடித்த பின் நிச்சயம் விஜய்யுடன் இணைவேன். அந்த நேரம் நான் சொல்லும் கதை அவருக்கு பிடிக்க வேண்டும்!" என கூறினார்.

விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக நடிகை திரிஷா நடித்துள்ளார். மேலும் சஞ்சய் தத், சாண்டி மாஸ்டர், இயக்குநர்கள் கவுதம் மேனன், மிஷ்கின் மற்றும் அர்ஜூன், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களும் இணைந்துள்ளனர். அனிருத் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.

மேலும் செய்திகள்