< Back
சினிமா செய்திகள்
7ஜி ரெயின்போ காலனி படத்தை ரீ-ரிலீஸ் செய்தால் மகிழ்ச்சி அடைவேன் - சோனியா அகர்வால்
சினிமா செய்திகள்

'7ஜி ரெயின்போ காலனி படத்தை ரீ-ரிலீஸ் செய்தால் மகிழ்ச்சி அடைவேன்' - சோனியா அகர்வால்

தினத்தந்தி
|
8 May 2024 4:10 AM IST

நல்ல கதையுடன் செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு வந்தால் நடிப்பேன் என்று சோனியா அகர்வால் கூறினார்.

சென்னை,

தமிழில் 'காதல் கொண்டேன்' படத்தில் அறிமுகமாகி கோவில், மதுர, 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, வானம் உள்ளிட்ட படங்களில் நடித்த சோனியா அகர்வால் தற்போது ஆனந்த் பால்கி இயக்கத்தில் இசையமைப்பாளர் தரண்குமாருடன் இணைந்து 'பேய் காதல்' பாடல் ஆல்பத்தில் நடித்து இருக்கிறார்.

பட வாய்ப்புகள் குறைந்து போனதால் பாடல் ஆல்பங்களில் நடிக்க தொடங்கி இருக்கிறீர்களா? என்ற கேள்விக்கு பதில் அளித்து சோனியா அகர்வால் கூறும்போது, "எனக்கு படங்கள் குறையவில்லை. மலையாளத்தில் பிஹைண்ட் படத்தில் நடித்துள்ளேன். தமிழில் இரண்டு படங்களிலும் நடிக்கிறேன். தெலுங்கிலும் இரண்டு படங்கள் கைவசம் உள்ளன'' என்றார்.

மேலும் அவர் கூறும்போது, "நான் நடித்த 7ஜி ரெயின்போ காலனி படத்தை மீண்டும் ரிலீஸ் செய்தால் மகிழ்ச்சி அடைவேன். நல்ல கதையுடன் செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு வந்தால் நடிப்பேன்'' என்றார்.

மேலும் செய்திகள்