கவர்ச்சியாக நடிப்பேன் - துஷாரா விஜயன்
|ஆர்யாவின் சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் துஷாரா விஜயன். தற்போது திரைக்கு வந்துள்ள கழுவேத்தி மூர்க்கன் படத்தில் அருள்நிதி ஜோடியாக நடித்துள்ளார்.
துஷாரா விஜயன் அளித்துள்ள பேட்டியில், "படங்கள் தேர்வில் எப்போதுமே நான் கவனமாக இருப்பேன். கதாபாத்திரம் எளிதில் என்னுடன் கனெக்ட் ஆக வேண்டும். 'கழுவேத்தி மூர்க்கன்' கவிதா என் மனதிற்கு நெருக்கமாக உணர்ந்த ஒரு பாத்திரம். நான் அதே பின்னணியில் இருந்து வந்ததால், இந்த கேரக்டரை செய்வது எளிதாக இருந்தது. "அருள்நிதி அர்ப்பணிப்புள்ள நடிகர்.
சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்த மாரியம்மா கதாபாத்திரத்தை என்னால் மறக்க முடியாது. அதன் இரண்டாம் பாகத்தை எடுப்பதாக தெரிவித்து உள்ளனர். இரண்டாம் பாகத்திலும் நான் இருந்தால் சந்தோஷப்படுவேன். அழைப்புக்காக காத்திருக்கிறேன். கதையும் கதாபாத்திரமும் எனது வசதிக்கு உட்பட்டு இருந்தால் கவர்ச்சியாக நடிப்பேன்.
ஏதேனும் ஒரு படத்தில் அதிரடி சண்டை போடும் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. சில படங்களுக்கு எதிராக சர்ச்சைகள் எழுகின்றன. சினிமாவை சினிமாவாக பார்க்க வேண்டும் என்பதே எனது கருத்து. பாலாஜி சக்திவேல் இயக்கத்திலும், வசந்த பாலன் இயக்கத்தில் அநீதி படத்திலும் நடித்து இருக்கிறேன்' என்றார்.