< Back
சினிமா செய்திகள்
எனக்கு சம்பளம் தரவில்லை - நடிகர் பாலா புகார்
சினிமா செய்திகள்

எனக்கு சம்பளம் தரவில்லை - நடிகர் பாலா புகார்

தினத்தந்தி
|
11 Dec 2022 8:52 AM IST

‘ஷபீக்கிண்டே சந்தோஷம்’ என்ற மலையாள படத்தில் நடித்த தனக்கும் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் உன்னிமுகுந்தன் பேசியபடி சம்பளம் கொடுக்கவில்லை என்று பாலா புகார் தெரிவித்து உள்ளார்.

தமிழில் அஜித்குமார் தம்பியாக 'வீரம்' படத்தில் நடித்து பிரபலமானவர் பாலா. 'காதல் கிசுகிசு, அம்மா அப்பா செல்வம்' உள்ளிட்ட மேலும் சில படங்களிலும் நடித்து இருக்கிறார். மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கிறார். பாலா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'ஷபீக்கிண்டே சந்தோஷம்' என்ற மலையாள படம் சில தினங்களுக்கு முன்பு திரைக்கு வந்து வெற்றி பெற்றது. ரூ.2 கோடி செலவில் தயாராகி ரூ.14 கோடி வசூலித்ததாக கூறப்படுகிற்து. இதில் உன்னி முகுந்தன் கதாநாயகனாக நடித்து தயாரித்து இருந்தார். இந்த படத்தில் நடித்த தனக்கும் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் உன்னிமுகுந்தன் பேசியபடி சம்பளம் கொடுக்கவில்லை என்று பாலா புகார் தெரிவித்து உள்ளார். ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற உன்னி முகுந்தனை பாலா ரசிகர்கள் முற்றுகையிட்டு சம்பளம் கொடுக்காததை கண்டித்து கேள்வி எழுப்பினர். இதனால் உன்னிமுகுந்தன் ரசிகர்களுக்கும், பாலா ரசிகர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. இதுகுறித்து பாலா கூறும்போது, ''உண்மை எப்போதும் உறங்காது. எனக்காக குரல் கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி" என்றார். பாலா விரைவில் புதிய படம் ஒன்றை இயக்க இருக்கிறார். இது தமிழ், மலையாளம் ஆகிய 2 மொழிகளில் தயாராக உள்ளது.

மேலும் செய்திகள்