திருமணத்திலும் என்னை உருவ கேலி செய்தனர் - நடிகை மஞ்சிமா மோகன்
|திருமணம் நடந்தபோது பலரும் வாழ்த்திய நிலையில், சிலர் உருவ கேலியும் செய்ததாக நடிகை மஞ்சிமா மோகன் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தமிழில் கவுதம் மேனன் இயக்கிய 'அச்சம் என்பது மடமையடா' படத்தில் சிம்பு ஜோடியாக நடித்து கதாநாயகியாக அறிமுகமானவர் மஞ்சிமா மோகன். சத்ரியன், இப்படை வெல்லும், தேவராட்டம், களத்தில் சந்திப்போம், துக்ளக் தர்பார், எப்.ஐ.ஆர். ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறார். மஞ்சிமா மோகனுக்கும், நடிகர் கவுதம் கார்த்திக்குக்கும் காதல் மலர்ந்து சில தினங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். மஞ்சிமா மோகன் உடல் எடை கூடியதை ஏற்கனவே சிலர் கேலி செய்து வலைத்தளத்தில் பதிவுகள் வெளியிட்டு வந்தனர். இந்த நிலையில் தற்போது அவருக்கு திருமணம் நடந்தபோது பலரும் வாழ்த்திய நிலையில், சிலர் உருவ கேலியும் செய்துள்ளனர். இதுகுறித்து மஞ்சிமா மோகன் அளித்துள்ள பேட்டியில், ''நான் சமூக வலைத்தளத்தில் மட்டும் உருவ கேலியை எதிர்கொள்ளவில்லை. எனக்கு திருமணம் நடந்தபோதும் சிலர் உருவ கேலி செய்தனர். அதை பொருட்படுத்தவில்லை. எனது உடல் எடையில் நான் சவுகரியமாக இருக்கிறேன். தேவை ஏற்படும்போது உடல் எடையை குறைக்க எனக்கு தெரியும். தொழில் ரீதியாக எனது உடல் எடையை குறைக்க வேண்டி வந்தால் எடையை குறைப்பேன்" என்றார்.