< Back
சினிமா செய்திகள்
எனக்கு வில்லியாக நடிக்க ஆசை - நடிகை கத்ரீனா கைப் ஓபன் டாக்
சினிமா செய்திகள்

எனக்கு வில்லியாக நடிக்க ஆசை - நடிகை கத்ரீனா கைப் ஓபன் டாக்

தினத்தந்தி
|
24 Jan 2024 1:15 AM IST

சமீபத்தில் வெளியான ‘மெரி கிறிஸ்மஸ்' படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்திருந்தார்.

மும்பை,

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் கத்ரீனா கைப். சமீபத்தில் வெளியான 'மெரி கிறிஸ்மஸ்' படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்திருந்தார். இந்த படத்தில் அவரது நடிப்புக்கு பாராட்டுகள் குவிந்தன.

இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கத்ரீனா கைப், 'காலத்துக்கு ஏற்ற மாதிரி மனிதர்களின் எண்ணங்களும், ஆலோசனைகளும் மாறிக்கொண்டே இருக்கும். ஹீரோயினை தாண்டி அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் நடிக்க வேண்டும் என விரும்புகிறேன். வில்லி கேரக்டர்களிலும், பீரியட் படங்களிலும் நடிக்க ஆசைப்படுகிறேன். இதுபோன்ற படங்கள் எனக்கு மிகப்பெரிய உந்துதலை ஏற்படுத்தும். நல்ல பீரியட் கதை கிடைத்தால் அதில் நிச்சயமாக நடிப்பேன்., என்று கூறினார்.

மேலும் இயக்குனர் ஸ்ரீராம் ராகவனுக்கு நான் தீவிர ரசிகை. 'மெரி கிறிஸ்மஸ்' படத்தில் அவரோடு இணைந்து பணியாற்றியது எனக்கு மிகுந்த சந்தோஷத்தை அளித்தது. அவர் திறமைக்கும், உணர்வுகளுக்கும் மிகுந்த மதிப்பு அளிப்பார்'' என்றும் கூறினார்.

மேலும் செய்திகள்