< Back
சினிமா செய்திகள்
சகுந்தலையாக நடிக்க கஷ்டப்பட்டேன் - நடிகை சமந்தா
சினிமா செய்திகள்

சகுந்தலையாக நடிக்க கஷ்டப்பட்டேன் - நடிகை சமந்தா

தினத்தந்தி
|
10 Jan 2023 8:19 AM IST

குந்தலை கதாபாத்திரத்தில் நடித்தபோது எதிர்கொண்ட கஷ்டங்களை சமந்தா பகிர்ந்துள்ளார். அவர் கூறும்போது,

சமந்தா 'மயோசிடிஸ்' என்ற தசை அழற்சி நோயில் சிக்கி சிகிச்சை எடுத்து வருகிறார். இந்த நிலையில் ஏற்கனவே அவர் நடித்து முடித்த 'சாகுந்தலம்' படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் விரைவில் திரைக்கு வர உள்ளது. துஷ்யந்தன், சகுந்தலை கதையை மையமாக வைத்து இந்த படம் தயாராகி உள்ளது. இதில் சமந்தா சகுந்தலை வேடத்தில் நடித்து இருக்கிறார்.

சகுந்தலை கதாபாத்திரத்தில் நடித்தபோது எதிர்கொண்ட கஷ்டங்களை சமந்தா பகிர்ந்துள்ளார். அவர் கூறும்போது, ''சாகுந்தலம் படத்தில் சகுந்தலையாக நடிக்கும்போது அந்த கதாபாத்திரத்தின் சுபாவத்திற்கு ஏற்றபடி முகத்தில், ஒரே மாதிரியான முகபாவனை காட்ட வேண்டி வந்தது. நடந்தாலும், பேசிக்கொண்டிருந்தாலும், ஓடினாலும், கடைசியில் அழுதாலும் கூட முகத்தில் அந்த பாவனை ஒரே மாதிரி இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. இதனால் மிகவும் கஷ்டப்பட்டேன். அப்படி நடிப்பதற்கு ஒரு கட்டத்தில் என்னால் முடியவில்லை. இதற்காக பிரத்யேக பயிற்சி கூட எடுத்துக்கொண்டேன்'' என்றார்.

மேலும் செய்திகள்