< Back
சினிமா செய்திகள்
சினிமாவில் சறுக்கி விழுந்தேன் -நடிகர் எஸ்.ஜே.சூர்யா
சினிமா செய்திகள்

சினிமாவில் சறுக்கி விழுந்தேன் -நடிகர் எஸ்.ஜே.சூர்யா

தினத்தந்தி
|
14 Jun 2023 11:48 AM IST

நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா தற்போது ராதாமோகன் இயக்கத்தில் பொம்மை படத்தில் கதாநாயகனாக நடித்து தயாரித்துள்ளார். இதில் நாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.

பட நிகழ்ச்சியில் எஸ்.ஜே.சூர்யா பேசும்போது, "ஒரு ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக எனது சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தேன். பிறகு டைரக்டராகி சம்பாதித்தேன். அதில் இருந்து தயாரிப்பாளராகி சம்பாதித்த மொத்த பணத்தையும் கொண்டு நியூ, அன்பே ஆருயிரே படங்கள் எடுத்தேன்.

அடுத்து எடுத்த படங்கள் சரியில்லாமல் போனதால் சறுக்கி கீழே விழுந்தேன். குழிக்குள் போய்விழுந்து திருப்பி அங்கிருந்து எழுந்து இசை என்று ஒரு படம் எடுத்து மீண்டும் தரைக்கு வந்து உட்கார்ந்தேன். அதன்பிறகு கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடித்து அங்கிருந்து பயணம் தொடங்கி உள்ளது.

மீண்டும் தயாரிப்பு பக்கம் போகவேண்டாம் என்று நினைத்தாலும் மனது கேட்கவில்லை. ராதாமோகன் சொன்ன பொம்மை கதை பிடித்துபோய் தயாரித்து நடித்து இருக்கிறேன். பிரியா பவானிசங்கர் பொம்மை போன்றே நடித்துள்ளார். படம் நன்றாக வந்துள்ளது. யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசைக்காகவே படத்தை பார்க்கலாம்.

இந்த படம், தமிழ், தெலுங்கில் வெளியாக உள்ளது. இந்தியில் ரீமேக் செய்யவும் திட்டம் உள்ளது. பொம்மை எனக்கு முக்கிய படமாக இருக்கும். எனது திருமணம் பற்றி பிறகு யோசிப்பேன். அஜித்குமார் அழைத்தால் மீண்டும் அவரோடு பணியாற்றுவேன்" என்றார்.

மேலும் செய்திகள்