'ஜிகர்தண்டா -1 நான் நடித்திருக்க வேண்டிய படம்' - பார்த்திபன் பதிவு
|‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ திரைப்படம் மனதை உலுக்கி விட்டது என பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தீபாவளியை முன்னிட்டு, 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தில் பணியாற்றிய படக்குழுவினருக்கு இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
ஜிகர்தண்டா -3 பார்த்தேன் என என்றாவது ஒரு நாள் நான் பதிவிடுவேன். காரணம், ஜிகர்தண்டா -2! நான் விமர்சகன் அல்ல. நிறை குறை சொல்ல! தெரியாமல் போய்,போன இடத்தில் பிடித்து விட்டால் அதன் பெயர் பேய்! இது கார்த்திக் சுப்புராஜ் என்ற பேயை பிடித்து போய் தானே படத்திற்கே போகிறேன். நினைத்தபடியே மனதை உலுக்கி விட்டது.
ஜிகர்தண்டா -1 நான் நடித்திருக்க வேண்டிய படம். முதல் பட அறிமுகத்திற்கு முன்பே நண்பர் திரு கார்த்திக் சுப்புராஜை எனக்கு அறிமுகம் என்பதால் கூடுதல் மகிழ்ச்சி. தியேட்டரில் வெடித்த கைதட்டல்களை தீபாவளி பட்டாசாக ரசித்தேன்."
இவ்வாறு பார்த்திபன் பதிவிட்டுள்ளார்.