நாளை நாடாளுமன்ற தேர்தல்- ஜெய் பீம் இயக்குநர் வலைத்தளத்தில் போட்ட திடீர் பதிவு
|தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
திரைப் பிரபலங்கள் பலரும் வாக்குரிமையின் முக்கியத்துவம் குறித்து பேசி வருகின்றனர். அந்தவகையில் இயக்குநர் த.செ ஞானவேல் ட்விட்டரில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அதில் "வாக்குரிமை என்பது என் உரிமைகளைக் காத்து, உணர்வுகளைப் புரிந்து ஆட்சி செய்கிற ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் சமூகக் கடமை" என குறிபிட்டிருக்கிறார்.
மேலும் அவர் பகிர்ந்துள்ள செய்திக் குறிப்பில், "வருங்கால தலைமுறையினருக்கு வெறுப்பு நிலவாத, சக இந்தியர்களின் தனித்துவத்தை மதிக்கிற பாதுகாப்பான சூழலை அமைத்து தருவது நமது தார்மீகக் கடமை. இந்தியா கூட்டணி கட்சிகளின் வாக்குறுதிகள் சமூக நல்லிணக்கத்தையும், சமூக நீதியையும் காப்பாற்றும் என்கிற நம்பிக்கை அளிக்கின்றன. மாநில உரிமை, மொழி உரிமை, கருத்து உரிமை, கல்வி உரிமை போன்ற அடிப்படை உரிமைகளை மீட்டெடுப்பதும், காத்துக் கொள்வதும் அவசியம்.அதன் அடிப்படையில் தி.மு.க, காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளடக்கிய இந்தியா கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும்படி நானறிந்த, என்னை அறிந்த அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.