தொழில்நுட்பகோளாறு காரணமாக தான் இன்ஸ்டாகிராமில் இருந்து விலகினேன் - யுவன் விளக்கம்
|நெகட்டிவிட்டி காரணமாக தான் யுவன் இன்ஸ்டாகிராமில் இருந்து விலகியதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வந்தனர்.
சென்னை,
வெங்கட் பிரபு விஜய்யுடன் இணைந்திருக்கும் 'கோட்' படத்தில் 'விசில் போடு' பாடல் யுவன் ஷங்கர் ராஜா இசையில் கடந்த 14-ம் தேதி வெளியானது. படத்தில் இருந்து வெளியாகும் முதல் பாடல் என்பதால் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்ப்புடன் இருந்தனர்.
ஆனால், பார்ட்டி தீமில் உருவாக்கப்பட்ட இந்தப் பாடல் ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யத் தவறியது. இப்படி, வெளியான ஒரு பாடலுக்கு யுவன் மீது ரசிகர்கள் நெகட்டிவிட்டி பரப்ப ஆரம்பித்து விட்டனர். இப்படியான சூழ்நிலையில்தான் யுவன் ஷங்கர் ராஜா தனது இன்ஸ்டா பக்கத்தில் அனைத்துப் பதிவுகளையும் நீக்கியுள்ளார். இப்போது அவரின் பக்கமும் இன்ஸ்டாவில் வரவில்லை. இதனால் நெகட்டிவிட்டி காரணமாக தான் அவர் இன்ஸ்டாகிராமில் இருந்து விலகியதாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வந்தனர்.இந்த நிலையில் , தொழில்நுட்பகோளாறு காரணமாக தான் இன்ஸ்டாகிராமில் இருந்து விலகியதாக யுவன் விளக்கம் அளித்துள்ளார் .
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ்-தள பதிவில்,
தொழில்நுட்ப கோளாறு காரணமாக தான் எனது இன்ஸ்டகிராம் கணக்கு முடங்கியது.எனது குழு இன்ஸ்டாகிராம் கணக்கை மீட்டெடுக்க முயற்சித்து வருகின்றனர். விரைவில் வருவேன். என தெரிவித்துள்ளார்.