< Back
சினிமா செய்திகள்
வழிகாட்டி உதவியதால் ஒருவழியாக தேர்ச்சி பெற்றுவிட்டேன் - நடிகை சமந்தா
சினிமா செய்திகள்

வழிகாட்டி உதவியதால் ஒருவழியாக தேர்ச்சி பெற்றுவிட்டேன் - நடிகை சமந்தா

தினத்தந்தி
|
24 March 2024 4:40 PM IST

ஊட்டச்சத்து நிபுணருமான அல்கேஷ் தனக்கு உதவியதால்தான் படத்தில் நன்றாக நடித்து தேர்ச்சி பெற்றேன் என நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.

பிரபலமான நடிகை சமந்தா சமீபத்தில் மயோசிடிஸ் எனப்படும் தன்னுடல் நோய் எதிர்ப்பு குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த நோய் ஒருவருக்கு ஏற்பட்டால், அது அவர் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு செல்களை தாக்கி தசைகளையும் வெகுவாக தாக்குகிறது. மேலும் தாங்க முடியாத வலியையும், வீக்கத்தையும் உண்டாக்கக் கூடும். இதன் காரணமாக இந்த நோயினால் பாதிக்கப்பட்ட நபரின் தசைகள் மிகவும் வலுவிழுந்து காணப்படும்.


மயோசிடிஸ் நோய் தாக்கிய பிறகு தன்னுடைய உடற்பயிற்சியினோடு சேர்த்து ஆட்டோ இம்யூன் ப்ரோட்டோக்கால் டயட் என்னும் கடுமையான உணவு கட்டுப்பாட்டையும் கடைப்பிடித்து வருகிறார். மயோசிடிஸ் நோய்க்காக ஏற்கனவே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதில் உடல்நிலை சற்று தேறிய நிலையில் மீண்டும் படப்பிடிப்புகளில் பங்கேற்று நடித்தார்.

நடிகை சமந்தா மயோசிடிஸ் நோய் தொடர்பாக தொடர்ந்து தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பேசி வருகிறார். தற்போது டேக் 20 என்ற பாட்காஸ்ட் ஒன்றை ஆரம்பித்து தனது நண்பரும் ஊட்டச்சத்து நிபுணருமான அல்கேஷுடன் தொடர்ந்து உரையாடி வருகிறார். அந்த வகையில் இந்த வார டாப்பிக்காக ஆட்டோ இம்யூனிட்டி பற்றி பேசியுள்ளார் சமந்தா.

குறிப்பாக மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட போதுதான் தான் "சிட்டாடல்" வெப் சீரிஸ் மற்றும் "குஷி" படத்தில் பிஸியாக நடித்ததாகவும் கூறினார். இது மட்டுமில்லாமல் அந்த சமயத்தில் மிக அதிகமான ஆக்சன் காட்சிகளில் நடித்ததால் நோயோடு தான் மிகவும் சிரமப்பட்டதாகவும், அல்கேஷ் அந்த சமயத்தில் தனக்கு பெருமளவு வழிகாட்டி உதவியதாகவும் அதனால்தான் அந்தப் படத்தில் நன்றாக நடித்து தேர்ச்சி(பாஸ்) ஆனேன் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் சினிமாவில் இருந்து பிரேக் அடித்தது பற்றி அவர் தெரிவித்திருப்பதாவது, "நான் ஒரே சமயத்தில் 10 வேலைகளை செய்வேன். ஐந்து மணி நேரம் மட்டுமே தூங்குவேன். நான் ஆக்டிவாக இருந்தேன். இது தான் நான். ஆனால், நான் இந்த சமயத்தில் கற்றுக் கொண்டது என்னவென்றால் நீங்கள் ஒரு விஷயத்தில் இருந்து தற்காலிகமாக ஓய்வு எடுப்பது என்பது நிச்சயமாக உங்களுடைய வீக்னஸ் கிடையாது. உங்கள் மனதிற்கும் உடலுக்குமான பூஸ்ட் அது என்பதை புரிந்து கொண்டேன்" எனவும் கூறியுள்ளார்.


மேலும் செய்திகள்