< Back
சினிமா செய்திகள்
I love Lokesh Kanagarajs film style - Pawan Kalyan
சினிமா செய்திகள்

'லோகேஷ் கனகராஜின் திரைப்பட பாணி எனக்கு மிகவும் பிடிக்கும்' - பவன் கல்யாண்

தினத்தந்தி
|
2 Oct 2024 11:42 AM IST

லோகேஷ் கனகராஜின் திரைப்பட பாணி தனக்கு மிகவும் பிடிக்கும் என்று பவன் கல்யாண் கூறியுள்ளார்.

சென்னை,

நடிகரும் ஆந்திர மாநில துணை முதல்-மந்திரியுமான பவன் கல்யாண் தற்போது, 'ஹரி ஹர வீர மல்லு' படத்தில் நடித்து வருகிறார். கிரிஷ் ஜாகர்லமுடி இயக்கும் இப்படம் அடுத்த ஆண்டு மார்ச் 28-ம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் தமிழ் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த பவன் கல்யாண், லோகேஷ் கனகராஜின் திரைப்பட பாணி தனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

'லோகேஷ் கனகராஜின் திரைப்பட பாணி எனக்கு மிகவும் பிடிக்கும். நான் அவருடைய 'லியோ' படத்தைப் பார்த்திருக்கிறேன்' என்றார். லோகேஷ் கனகராஜ் தென்னிந்திய சினிமாவில் மிகவும் வெற்றிகரமான இயக்குனர்களில் ஒருவராக உள்ளார். தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் 'கூலி' படத்தை இயக்கி வருகிறார்.

மறுபுறம், நடிகர் பவன் கல்யாண் 'ஹரி ஹர வீர மல்லு' படத்திற்கான தனது பகுதிகளை முடித்த பிறகு, பவன் சுஜீத்தின் இயக்கத்தில் உருவாக உள்ள 'ஓஜி' படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்