< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
இந்திய ரசிகர்களை பற்றி பேசிய அவெஞ்சர்ஸ் நடிகர் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்
|25 Sept 2024 7:53 PM IST
'இந்தியாவையும் இந்திய ரசிகர்களையும் நேசிக்கிறேன்' என்று கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் கூறினார்.
மும்பை,
மார்வெல் சினிமாட்டிக் யுனிவெர்ஸ் படங்களின் வரிசையில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் 'அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்'. உலகம் முழுவதும் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், தோர் கதாபாத்திரத்தில் நடித்திருந்த கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் இந்திய ரசிகர்கள் பற்றி பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
'இந்தியாவையும் இந்திய ரசிகர்களையும் எனக்கு மிகவும் பிடிக்கும். கடந்த 2018-ம் ஆண்டு 'இன்பினிட்டி வார்' வெளிவந்தபோது ஒரு வீடியோ பார்த்தேன். அதில், இந்த படத்தில் வரும் 'பிரிங் மீ தானோஸ்' காட்சிக்கு இந்திய ரசிகர்கள் ஒரு திரையரங்கில் பாப்கார்னை எறிந்து ஆரவாரம் செய்தனர். அதுபோன்ற எதையும் நான் அதற்கு முன்பு பார்த்ததில்லை. ஒவ்வொரு முறையும் நான் இந்தியா செல்லும்போது, அதை நினைத்து பார்ப்பேன்,' என்றார்.