'பிளடி பெக்கர்' படத்திற்காக உண்மையாகவே பிச்சை எடுத்தேன்- நடிகர் கவின்
|‘பிளடி பெக்கர்’ படத்திற்கு தன்னை தயார்படுத்திக் கொண்ட விதம் பற்றி நடிகர் கவின் நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.
சென்னை,
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் அறிமுகமாகி வளர்ந்து வரும் டாடா , ஸ்டார் ஆகிய படங்கள் பெரியளவில் வெற்றிபெற்றுள்ள நிலையில் தற்போது அவர் நெல்சன் திலிப்குமார் தயாரிக்கும் 'பிளடி பெக்கர்' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கவினுடன் ரெடின் கிங்ஸ்லி, மாருதி பிரகாஷ்ராஜ், சுனில் சுகாதா, அக்ஷயா ஹரிஹரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இயக்குநர் நெல்சன் திலிப்குமாரின் உதவி இயக்குநரான சிவபாலன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் பிளடி பெக்கர். இப்படத்தில் கவின் பிச்சைக்காரன் கெட் அப்பில் நடித்துள்ளார். நெல்சனின் படங்களைப் போலவே இப்படமும் டார்க் காமெடி ஜானரில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. 'பிளடி பெக்கர்' படம் வரும் 31 ம் தேதி வெளியாக இருக்கிறது.
'பிளடி பெக்கர்' படத்திற்கு தன்னை தயார்படுத்திக் கொண்ட விதம் பற்றி நடிகர் கவின் நேர்காணலில் பகிர்ந்துள்ளார். அதில் " உண்மையாகவே பிச்சைக்காரர்களுக்கு காசு போடுகிறார்களா என்கிற சந்தேகம் எனக்கு வந்தது. அதனால் கெட் அப் போட்டுக்கொண்டு தெருவில் நடந்தேன். ஒரு அம்மாவிடம் சென்று சாப்பிட்டு ரெண்டு நாள் ஆச்சு காசு இருந்தா கொடுங்க என்று கேட்டேன். அந்த அம்மா எனக்கு இருபது ரூபாய் கொடுத்தார். அதற்கு பின் எனக்கு நம்பிக்கை வந்து சரி ஷூட் போகலாம் என முடிவு செய்தேன்" என கவின் தெரிவித்துள்ளார்.