< Back
சினிமா செய்திகள்
 பொன்னியின் செல்வன்  படத்தின் முதல் பாகமே நான் இன்னும் பார்க்கவில்லை - பார்த்திபன்
சென்னை
சினிமா செய்திகள்

' பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் பாகமே நான் இன்னும் பார்க்கவில்லை - பார்த்திபன்

தினத்தந்தி
|
29 March 2023 8:54 PM IST

பொன்னியின் செல்வன் படத்தின் வாய்ப்பு கிடைப்பது கடினம். அந்த சந்தோஷத்தோடு நெஞ்சில் வாள் சுமந்து வந்திருக்கிறேன்.

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன்-2 திரைப்படம் வருகிற ஏப்ரல் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் முதல் பாகம் ரசிகர்களை கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்றதால் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பொன்னியின் செல்வன் படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று (29.03.2023) நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்று வருகிறது. இதில், பத்திரிகையாளர்களிடம் நடிகர் பார்த்திபன் பேசியதாவது, "என்னை மாதிரியானவர்களுக்கு பொன்னியின் செல்வன் படத்தின் வாய்ப்பு கிடைப்பது கடினம். அந்த சந்தோஷத்தோடு நெஞ்சில் வாள் சுமந்து வந்திருக்கிறேன்.

பொன்னியின் செல்வன் முதல் பாகத்தையே நான் இன்னும் பார்க்கவில்லை. முதல் நாள் படம் பார்க்க வேண்டும் என்று தஞ்சாவூர் சென்று ரசிகர்களிடம் மாட்டிக்கொண்டேன். நான் முதல் பாகத்தை பார்க்காதது பெரிய ஆச்சர்யமான செய்தி. முதல் பாகத்தில் என்ன இருந்தது என்று தெரியாது இரண்டாவது பாகத்தில் என்ன இருக்க போகிறது என்று தெரியாது , இந்த படத்தில் நான் இருப்பது தான் என்னுடைய சந்தோஷன் பெருமை என்று நினைத்திருந்தேன்.

முதல் பாகத்தில் எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. சின்ன கதாபாத்திரம் என்றாலும் நிறைவாக நடித்திருந்தேன் என்று கூறினார்கள். எல்லா படத்திற்கும் அங்கீகாரம் கிடைக்க வேண்டும். வரலாற்று படத்திற்கு மட்டுமல்லாமல் சராசரி படத்திற்கு கூட வரலாறு படைக்கும் அளவிற்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும்" என்று பேசினார்.

மேலும் செய்திகள்