< Back
சினிமா செய்திகள்
சினிமாவில் நான் சாதித்து விட்டேன் - நடிகை தமன்னா
சினிமா செய்திகள்

"சினிமாவில் நான் சாதித்து விட்டேன்" - நடிகை தமன்னா

தினத்தந்தி
|
30 Dec 2022 2:44 PM IST

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ள தமன்னாவை `பாகுபலி' போன்று வந்த பல படங்கள் திறமையான நடிகை என்று அடையாளம் காட்டி உள்ளன. இந்த நிலையில் தனது சினிமா அனுபவங்களை தமன்னா பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில்,

``எந்தத் துறையாக இருந்தாலும் சரி, நாம் நினைத்ததெல்லாம் உடனுக்குடன் நடந்து விடாது. எதற்கும் சரியான நேரம் என்று ஒன்று வர வேண்டும். அதுவரை நம் முன்னே இருக்கும் வேலையை மனப்பூர்வமாக நாம் செய்து கொண்டே காத் திருக்க வேண்டும்.

நான் சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலத்தை, தற்போதைய நிலையோடு ஒப்பிடும்பொழுது, இப்போது எனக்கு கிடைக்கும் கதாபாத்திரங்கள் மிகவும் திருப்தியை தருகின்றன. ஆரம்பத்திலேயே நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நமது திறமையை காட்ட வேண்டும் என ஆசைப்பட்டால் அனைவருக்கும் அது சாத்தியமாகாது.

அதனால்தான் சினிமாவுக்கு வந்த புதிதில் அதுமாதிரியான கதாபாத்திரங்களில் நடிப்பது குறித்து யோசிக்கவே இல்லை. சரியான நேரத்தை எதிர்பார்த்து காத்திருந்தேன். கிடைத்த கதாபாத்திரங்களின் எல்லையைப் பற்றி சிந்திக்காமல் நமக்கு கிடைத்த பாத்திரத்தில் ரசிகர்களை எப்படி கவர வேண்டும், அவர்கள் மனதில் எப்படி இடம் பிடிக்க வேண்டும் என்ற வழியில் மட்டுமே யோசித்தேன்.

வர்த்தக ரீதியான படங்களில் நடித்துக் கொண்டே சினிமாவை நேசிப்பவர்கள் என்னைப் பற்றி பேசும்படி செய்தேன். நான் சாதித்த மிகச்சிறந்த லட்சியம் இதுதான். இப்போது மனதுக்கு பிடித்தமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளன. வலுவான பலமான கதாபாத்திரங்கள் கிடைக்கின்றன. இப்போது இந்த பயணம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. சினிமாவில் சாதித்து விட்டேன் என்ற திருப்தியும் இருக்கிறது''.

மேலும் செய்திகள்