"நானும் பாலியல் தொல்லைக்கு ஆளாகி இருக்கிறேன்" புது கதாநாயகி மதுனிகா
|தானும் பாலியல் தொல்லைக்கு ஆளாகி இருக்கிறேன் என்று புது கதாநாயகி மதுனிகா கூறி உள்ளார்.
புதுமுகங்கள் ஆதவ் பாலாஜி, மதுனிகா ஜோடியாக நடித்துள்ள புதிய படம், 'மெய்ப்பட செய்.' 'ஆடுகளம்' ஜெயபால், ஓ.ஏ.கே.சுந்தர், பெஞ்சமின் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருக்கிறார்கள். புது டைரக்டர் வேலன் டைரக்டு செய்ய, பி.ஆர்.தமிழ் செல்வம் தயாரித்து இருக்கிறார்.
'மெய்ப்பட செய்' பற்றி டைரக்டர் வேலன் கூறியதாவது:-
"பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள் தொடர் கதையாகி வரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களை சட்டம் எப்படி பார்க்கிறது? அவர்களுக்கான நியாயம் உடனே கிடைக்கிறதா? என்ற கேள்வி களோடு இந்தப் படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
பாலியல் குற்றம் செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்துவதுடன், பாலியல் குற்றங்கள் குறைவதற்கான வழிமுறைகளையும் சொல்லியிருக்கிறோம்."
படத்தின் கதாநாயகி மதுனிகா கூறும்போது, "பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகமாகிக்கொண்டே வருகிறது. நானும் பாலியல் தொல்லைக்கு ஆளாகியிருக்கிறேன்" என்றார். அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தது யார்? என்பதை கூற மறுத்து விட்டார்.