< Back
சினிமா செய்திகள்
எனக்கு காலை 4.30 - 6.00 கல்யாணம் நடிகர் பாலா கலகல பேட்டி
சினிமா செய்திகள்

"எனக்கு காலை 4.30 - 6.00 கல்யாணம்" நடிகர் பாலா கலகல பேட்டி

தினத்தந்தி
|
12 May 2024 7:23 PM IST

உதவி செய்வதற்காக சம்பாதிக்க வேண்டும் என தோன்றுவதாக நடிகர் பாலா கூறினார்.

கடலூர்,

கடலூரில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் பாலா கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, 'உதவி செய்கையில் மக்களிடம் உள்ள வரவேற்பு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்து பேசியதாவது;

"மக்களின் அன்பும், ஆதரவும்தான் என்னை இயங்க வைக்கிறது. முன்பெல்லாம் சம்பாதிப்பதில் உதவி செய்யவேண்டும் என நினைப்பேன். இப்போது உதவி செய்வதற்காக சம்பாதிக்க வேண்டும் என தோன்றுகிறது. என்னையும் மதித்து மனுவெல்லாம் கொடுக்கிறார்கள். இதையெல்லாம் பார்க்கும்போது உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணமே உள்ளது. மக்களுக்கு தேவையானதை தொடர்ந்து செய்ய வேண்டும் என்பதே எண்ணமாக உள்ளது." என்றார்.

தொடர்ந்து, திருமணம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் கூறியதாவது; " கல்யாணம் குறித்து கேட்கிறீர்கள்.. கல்யாணம் காலை 4.30 - 6.00 மணிக்குள் நடைபெறும். ஆனால் எப்போது நடைபெறும் என தெரியவில்லை. தேதி பின்னர் அறிவிக்கப்படும்." இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் செய்திகள்