'கவர்ச்சியாக நடிக்க நிறைய அழைப்புகள் வந்தன ஆனால்... '- ஐஸ்வர்யா ராஜேஷ்
|தனக்கு பொருத்தமான கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புவதாக ஐஸ்வர்யா ராஜேஷ் கூறினார்.
சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான படம் டியர். இப்படம் கடந்த ஏப்ரல் மாதம் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
தற்போது, கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாருக்கு ஜோடியாக 'உத்தரகாண்டா' படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துவருகிறார். இப்படத்தை ரோஹித் படக்கி இயக்குகிறார். இந்த படம் மூலம் ஐஸ்வர்யா ராஜேஷ் கன்னட திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனக்கு பொருத்தமான கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புவதாக கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
'கவர்ச்சியாக நடிக்க எனக்கு நிறைய அழைப்புகள் வந்தன. ஆனால், நான் அதை தேர்ந்தெடுக்கவில்லை, ஏனென்றால், எனக்கு பொருத்தமான கதாபாத்திரத்தில் நடிக்க விரும்பினேன். அது எனக்கு பொருத்தமானது இல்லை.
அது எனக்கு தேவையா என்று சந்தேகங்களை எழுப்பும் ஒன்றை நான் செய்ய விரும்பவில்லை. எனது திரைப்படங்கள் சமூகப் பொறுப்புடன் இருக்க வேண்டும், குடும்பங்களை மகிழ்விக்க வேண்டும் மற்றும் அதில் என் நடிப்பைப்பார்த்து வாய்ப்புகள் வரவேண்டும் என்று நான் நினைக்கிறேன்,' என்றார்.