< Back
சினிமா செய்திகள்
நீங்கள்தான் நான் என்பதை உணர்கிறேன் அப்பா - ரஜினிகாந்த் குறித்து மகள் ஐஸ்வர்யா நெகிழ்ச்சி பதிவு
சினிமா செய்திகள்

"நீங்கள்தான் நான் என்பதை உணர்கிறேன் அப்பா" - ரஜினிகாந்த் குறித்து மகள் ஐஸ்வர்யா நெகிழ்ச்சி பதிவு

தினத்தந்தி
|
6 Jun 2023 5:38 AM IST

'லால் சலாம்' திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பது குறித்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

சென்னை,

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் புதிய திரைப்படம் 'லால் சலாம்'. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி வரும் இத்திரைப்படத்தில் நடிகர்கள் விக்ராந்த், விஷ்ணு விஷால், ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் இத்திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடிக்கின்றனர். இத்திரைப்படத்தை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

முதல் கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்ற நிலையில் தற்போது புதுவையில் 'லால் சலாம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், 'லால் சலாம்' திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பது குறித்து அவரது மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் அவர், "நான் உங்களை பார்க்கிறேன். நான் உங்களை வைத்து படமெடுக்கும் ஒருநாள் வரும் என்று கற்பனை கூட செய்ததில்லை. நான் உங்களை மிகவும் மதிக்கிறேன். சிலசமயம் நான் உங்கள் வழியாக பார்க்கிறேன். பெரும்பாலான முறை உங்களுடன் இந்த உலகத்தை பார்க்கிறேன். ஒவ்வொரு நாளும் நீங்கள்தான் நான் என்பதை உணர்கிறேன் அப்பா. உங்களை அதிகமாக நேசிக்கிறேன்" என்று கூறியுள்ளார்.


மேலும் செய்திகள்