திருமணமாகி விவாகரத்து பெறுவது எனக்கு பிடிக்காது - நடிகை திரிஷா பேட்டி
|திருமணமாகி விவாகரத்து பெறுவது எனக்கு பிடிக்காது என்று நடிகை திரிஷா அளித்து பேட்டியில் கூறியுள்ளார்.
சினிமா துறையில் இருக்கும் தற்போதையை முன்னணி சீனியர் கதாநாயகிகளில் திரிஷாவும் ஒருவர். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக தமிழ், தெலுங்கில் எத்தனையோ வெற்றி படங்களில் நடித்து கொடிகட்டி பறக்கிறார். திரிஷா இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது அவரது ரசிகர்களுக்கு மனக்குறையாக உள்ளது. ஏற்கனவே நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் கடைசி நேரத்தில் திருமணத்தை ரத்து செய்து விட்டார். தெலுங்கு நடிகர் ராணாவுடனும் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார். இந்த நிலையில் தற்போது திருமணம் குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். இதுகுறித்து ஐதராபாத்தில் திரிஷா அளித்துள்ள பேட்டியில், ''நான் எதற்கு திருமணம் செய்து கொள்ளவில்லை என்று என்னை நிறைய பேர் கேட்கிறார்கள். எனக்கு அவர்கள் கேட்கும் விதம் சுத்தமாக பிடிக்கவில்லை. சாதாரணமாக என்னிடம் எப்போது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என நினைக்கிறீர்கள் என்று கேட்டால் மட்டுமே உங்களுக்கு பதில் கிடைக்கும். எப்போது என்றால் எனக்கு கூட தெரியாது. அது முழுமையாக நான் யாரோடு இருக்கிறேன். யாரை எனக்கு பிடிக்கிறது என்பதை பொறுத்து இருக்கிறது. நான் வாழ்நாள் முழுவதும் சேர்ந்திருக்கக்கூடிய மனிதர் இவர் தான் என்று எனக்கு தோன்ற வேண்டும். எனக்கு விவாகரத்துகள் மீது நம்பிக்கை இல்லை. திருமணம் ஆன பிறகு விவாகரத்து பெற்றுக்கொள்வது எனக்கு வேண்டாம். என்னை சுற்றி இருக்கும் நிறைய பேர் திருமணமான பிறகு அதிருப்தியாக இருக்கிறார்கள். நான் அது போன்ற திருமணத்தில் இருக்க விரும்பவில்லை" என்றார்.