'லேடி பவர் ஸ்டார்' பட்டம் வேண்டாம் - நடிகை சாய் பல்லவி
|நடிகை சாய் பல்லவிக்கு லேடி பவர் ஸ்டார் என பட்டம் வழங்கப்பட்டுள்ள நிலையில் அது பற்றிய தனது கருத்தை அவர் தெரிவித்துள்ளார்.
மலையாளத்தில் வெளியான பிரேமம் படம் மூலம் அறிமுகமான சாய் பல்லவி தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ளார். அவரது நடனங்களையும் பரபரப்பாக பேசுகின்றனர். இந்த நிலையில் சாய்பல்லவியை தெலுங்கு ரசிகர்கள் லேடி பவர் ஸ்டார் என்ற பட்டம் வைத்து அழைக்க தொடங்கி உள்ளனர். இதே வாசகத்துடன் போஸ்டர்களும் ஒட்டுகிறார்கள். விழாக்களுக்கு சாய் பல்லவி வரும்போது லேடி பவர் ஸ்டார் என்று கோஷம் போட்டு வரவேற்கின்றனர்.
இதுகுறித்து சாய் பல்லவி அளித்துள்ள பேட்டியில், ''என் பெயருக்கு முன் லேடி பவர் ஸ்டார் என்று பட்டம் வேண்டாம். இப்படி பட்டம் வைத்துக் கொள்வது சரியல்ல. இது போன்ற பட்டங்களுக்கு நான் ஈர்ப்பு ஆக மாட்டேன். ரசிகர்கள் அன்பினால் வளர்ந்தேன். அவர்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என மட்டுமே ஆசைப்படுகிறேன். இதுவரை நான் நடித்த கதாபாத்திரங்களினால் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தேன். இன்னும் நல்ல நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன். நான் சாதாரணமாக இருக்கவே ஆசைப்படுகிறேன். இதுபோன்ற பட்டங்களால் மனதில் நெருக்கடி ஏற்படுமே தவிர வேறு எந்த பயனும் இல்லை" என்றார்.