< Back
சினிமா செய்திகள்
முத்தக்காட்சி, படுக்கையறை காட்சிகளில் எனக்கு உடன்பாடு இல்லை: நடிகை சாய் தன்ஷிகா
சினிமா செய்திகள்

முத்தக்காட்சி, படுக்கையறை காட்சிகளில் எனக்கு உடன்பாடு இல்லை: நடிகை சாய் தன்ஷிகா

தினத்தந்தி
|
16 May 2024 1:18 PM IST

முத்தக்காட்சி, படுக்கையறை காட்சிகளில் நடிப்பதில் தனக்கு உடன்பாடு இல்லை என்று நடிகை சாய் தன்ஷிகா கூறியுள்ளார்.

சென்னை,

'பேராண்மை' படத்தில் கல்லூரி மாணவியாக நடித்து தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர், தன்ஷிகா. தஞ்சையில் பிறந்த தன்ஷிகா சாய்பாபா மீது கொண்ட பக்தி காரணமாக தன் பெயரை சாய் தன்ஷிகா என மாற்றிக்கொண்டார். தற்போது 'தி புரூப்' என்ற படத்தில் அதிரடி கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் சாய் தன்ஷிகா. கிளாமர் படங்களில் நடிப்பதில் தனக்கு அதிக விருப்பமில்லை என்று சொல்லி வரும் சாய் தன்ஷிகா, கதைக்கு தேவைப்பட்டால் நடிப்பேன் என்றும் சொல்கிறார்.

இது தொடர்பாக சாய் தன்ஷிகா கூறுகையில், " பொதுவாக கிளாமர் வேடங்களில் நடிக்கமாட்டேன். ஏனெனில் கிளாமருக்கு நான் செட் ஆகமாட்டேன். சிலர் கிளாமரை அழகாக காட்டுவார்கள். சிலர் அதை வலுக்கட்டாயமாக திணிப்பார்கள். ஆனால் `தி புரூப்' படத்தில் அழகான கிளாமர் என்பதால் அப்படி நடித்திருக்கிறேன். கவர்ச்சியாக நடிப்பது என்பதெல்லாம் கதையை பொறுத்து அதுவாக அமையவேண்டும்.

முத்தக்காட்சி, படுக்கையறை காட்சிகள் என்பதிலும் எனக்கு உடன்பாடு இல்லை. எனக்கு பிடித்த நடிகை சாய் பல்லவி. அவரது பொறுமை, விடாமுயற்சி, தனித்துவமான நடிப்பு, ஆன்மிக தேடல் போன்ற எல்லா விஷயங்களும் எனக்கு பிடிக்கும். அதேபோல தனுசின் மெருகேறி வரும் நடிப்பையும் கண்டு வியக்கிறேன்" என்றார்.

மேலும் செய்திகள்