< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
'என் அப்பா இயக்கத்தில் நடிப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை - கன்னட நடிகர் மகள்
|25 Sept 2024 3:51 PM IST
கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் துனியா விஜய்.
பெங்களூரு,
கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் துனியா விஜய். இவர் நடிப்பது மட்டுமில்லாமல் சில படங்களை இயக்கியும் உள்ளார். இவரது மகள் மோனிஷா. நியூயார்க் பிலிம் அகாடமியில் பட்டம் பெற்ற மோனிஷா, தற்போது தனது தந்தை எழுதி இயக்கும் 'சிட்டி லைட்ஸ்' படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், தனது அப்பாவுடனான சில விஷயங்களை நினைவு கூர்ந்துள்ளார் மோனிஷா. இது குறித்து அவர் கூறுகையில்,
'எனது சிறுவயதில் அப்பா நடித்த படமொன்றின் படப்பிடிப்பு தளத்தில் நான் இருந்தபோது ஒரு நாள் கண்டிப்பாக நடிகையாவேன் என்று கூறினேன். அந்த நேரத்தில், என் அப்பா அதை கடுமையாக எதிர்த்தார். எனது சினிமா வாழ்க்கையை ஒரு காலத்தில் தடை செய்த என் அப்பாவின் இயக்கத்தில் இப்போது நான் ஒரு படத்தில் நடிக்கிறேன். இதை நான் எதிர்பார்க்கவில்லை ," என்றார்