< Back
சினிமா செய்திகள்
உங்களோடு என்னை ஒப்பிட முடியாது - ரஜினியை பாராட்டிய நடிகர் அமிதாப்பச்சன்...!

Image Credits : Twitter.com/@rajinikanth

சினிமா செய்திகள்

'உங்களோடு என்னை ஒப்பிட முடியாது' - ரஜினியை பாராட்டிய நடிகர் அமிதாப்பச்சன்...!

தினத்தந்தி
|
27 Oct 2023 10:03 AM IST

ஞானவேல் டைரக்டு செய்யும் படத்தில் ரஜினிகாந்தும், அமிதாப்பச்சனும் இணைந்து நடித்து வருகிறார்கள்.

சென்னை,

ரஜினிகாந்த் தற்போது 'ஜெய்பீம்' படத்தை இயக்கி பிரபலமான ஞானவேல் டைரக்டு செய்யும் படத்தில் நடித்து வருகிறார். இது ரஜினிக்கு 170-வது படம். இந்தப்படத்துக்கு தற்காலிகமாக 'தலைவர் 170' என்று பெயர் வைத்துள்ளனர்.

இதில் இந்தி நடிகர் அமிதாப்பச்சனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ரஜினியும், அமிதாப்பச்சனும் 1991-ல் வெளியான 'ஹம்' இந்தி படத்தில் நடித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது மும்பையில் நடக்கும் படப்பிடிப்பில் ரஜினிகாந்தும், அமிதாப்பச்சனும் இணைந்து நடித்து வருகிறார்கள். படப்பிடிப்பு தளத்தில் அமிதாப்பச்சனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ரஜினிகாந்த் சமூகவலைத்தளத்தில் பகிர்ந்து, ''33 ஆண்டுகளுக்குப் பிறகு எனது வழிகாட்டியான அமிதாப்பச்சனுடன் இணைந்து நடிப்பதன் மூலம் எனது இதயம் மகிழ்ச்சியில் துடிக்கிறது'' என்று பதிவிட்டு உள்ளார்.

ரஜினி பதிவுக்கு அமிதாப்பச்சன் பதில் அளித்துள்ளார். அவர் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ரஜினிகாந்த் சார். நீங்கள் என் மீது மிகவும் அன்பு வைத்து இருக்கிறீர்கள். ஆனால் படத்தின் தலைப்பை பாருங்கள், அதில் 'தலைவர் 170' என்று இருக்கிறது. தலைவர் என்றால் லீடர், ஹெட், சீப். நீங்கள்தான் ஹெட். நீங்கள்தான் தலைவர். அதில் ஏதாவது சந்தேகம் இருக்கிறதா மக்களே? என்னை உங்களோடு ஒப்பிட முடியாது. உங்களுடன் மீண்டும் பணிபுரிவது எனக்கு பெரிய கவுரவம்'' என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்