எனக்கு சிவபக்தி அதிகம் - நடிகை காஜல் அகர்வால்
|என் குழந்தைகளுக்கு சிவபெருமானின் பெயரை வைக்க வேண்டும் என்று முன்னரே முடிவு செய்து விட்டேன்
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் காஜல் அகர்வால் திருமணத்துக்கு பிறகும் தொடந்து நடித்து வருகிறார். இவருக்கு நீல் என்ற ஆண் குழந்தை உள்ளது. காஜல் அகர்வால் அளித்துள்ள பேட்டியில், "எனக்கு சிவ பக்தி அதிகம். சிவபெருமானை எப்போதும் வணங்கி வருகிறேன். என் குழந்தைகளுக்கு சிவபெருமானின் பெயரை வைக்க வேண்டும் என்று முன்னரே முடிவு செய்து விட்டேன். எனது கணவர் கவுதம் அழைப்பதற்கும், எழுதுவதற்கும் சுலபமாக இருக்கும் ஒரு பெயரை வைக்கலாம் என்றார்.
நீலகண்டன் என்கிற சிவபெருமானின் பெயரில் முதல் இரண்டு எழுத்துக்களை எடுத்துக்கொண்டு என் மகனுக்கு நீல் என்று பெயர் வைத்தோம். முன்பெல்லாம் குழந்தைகளை வளர்க்கும் தாய்மார்களை பார்க்கும்போது அற்புதமான உணர்வு ஏற்படும். நானும் தாயாகி மகன் நீலை வளர்க்கும்போது அதே உணர்வு ஏற்பட்டது.சில நேரங்களில் அவனை பிரிந்து இருப்பது கஷ்டமாக இருக்கும். ஜிம்முக்கும், படப்பிடிப்புக்கும் செல்லும்போது இது தவிர்க்க முடியாது. அந்த நேரத்தில் மனம் சங்கடப்படும். ஆனால் வீட்டிற்கு திரும்பி வந்ததும் அவன் முகம் முழுவதும் சந்தோஷத்தை பார்த்து என் வேதனை எல்லாம் பறந்து விடுகிறது'' என்றார்.