< Back
சினிமா செய்திகள்
திருமண உறவில் இருந்து வெளியேறுகிறேன்... திரௌபதி பட நடிகையின் பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சி...!
சினிமா செய்திகள்

திருமண உறவில் இருந்து வெளியேறுகிறேன்... திரௌபதி பட நடிகையின் பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சி...!

தினத்தந்தி
|
2 Dec 2023 1:33 PM IST

திரௌபதி பட நடிகை ஷீலா ராஜ்குமார் திருமண உறவில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.

சென்னை,

இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் வெளியான 'ஆறாது சினம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஷீலா ராஜ்குமார். தொடர்ந்து டூ லெட், மண்டேலா, திரௌபதி, பிச்சைக்காரன் 2, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார். தற்போது இவர் பல படங்களிலும் வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார்.

பரதநாட்டிய கலைஞரான இவர் திரைப்பட உதவி இயக்குனர் தம்பி சோழன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி கடலுக்கு நடுவில் வித்தியாசமான முறையில் இவர்களது திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் ஷீலா ராஜ்குமார் திருமண உறவில் இருந்து வெளியேறி உள்ளதாக தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர் அந்த பதிவில், 'திருமண உறவிலிருந்து நான் வெளியேறுகிறேன். நன்றியும் அன்பும்' என்று தெரிவித்துள்ளார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த முடிவிற்கு காரணம் என்ன என்பது குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும் செய்திகள்