< Back
சினிமா செய்திகள்
நான் அரசியல் செய்துகொண்டுதான் இருக்கிறேன்- நடிகர் ஆர்.ஜே.பாலாஜி பேட்டி
சினிமா செய்திகள்

'நான் அரசியல் செய்துகொண்டுதான் இருக்கிறேன்'- நடிகர் ஆர்.ஜே.பாலாஜி பேட்டி

தினத்தந்தி
|
8 Feb 2024 3:24 PM IST

சமீபத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் ’சிங்கப்பூர் சலூன்’ படம் வெளியானது.

சென்னை,

நானும் ரவுடிதான், எல்.கே.ஜி, மூக்குத்தி அம்மன், ரன் பேபி ரன் போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி. ரேடியோ ஜாக்கியாக வாழ்க்கையை தொடங்கிய இவர் தற்போது படங்களில் நடிப்பதோடு கிரிக்கெட் போட்டிகளில் தனக்கே உரித்தான பாணியில் வர்ணனையாளராக இருந்து ரசிகர்களை வியப்பூட்டி வருகிறார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் 'சிங்கப்பூர் சலூன்' படம் வெளியானது. இந்த படம் வெளியான நாள் முதலே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக வெற்றி அடைந்துள்ளது. இந்நிலையில் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி அரசியலுக்கு வருவது குறித்து கருத்து தெரிவித்து உள்ளார்.

அவர் சமீபத்திய பேட்டியில் பேசியதாவது, 'தேர்தலில் நிற்பதும், அதற்காக பிரசாரம் செய்வதும் மட்டுமே அரசியல் என்றால் நான் அரசியலுக்கு வரமாட்டேன். ஒரு தெருவில் தேவையில்லாமல் ஒரு மரத்தை வெட்டுகிறார்கள். அதை தடுக்க நீங்கள் குரல் கொடுத்தால் நீங்களும் அரசியல்வாதிதான். ஒரு ஏழையின் குழந்தைக்கு பள்ளி கட்டணம் கட்டினோம் என்றால் நாமும் அரசியல்வாதிதான். அந்த அரசியலை நான் செய்துகொண்டுதான் இருக்கிறேன், எப்போதும் செய்வேன்' என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்