< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
நான் வில்லனா முன்னாடி வந்து நின்னா... - வெளியானது 'ஜவான்' டிரைலர்
|31 Aug 2023 1:03 PM IST
ஷாருக்கான் நடித்துள்ள 'ஜவான்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
பாலிவுட் நட்சத்திரம் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஜவான்'. இயக்குனர் அட்லி இயக்கியுள்ள ஜவான் படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, சானியா மல்ஹோத்ரா, பிரியாமணி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை கௌரி கான் தயாரித்துள்ளார்.
ஜவான் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை தாம்பரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இதில் நடிகர் ஷாருக்கான், இசையமைப்பாளர் அனிரூத், இயக்குநர் அட்லி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் தற்போது 'ஜவான்' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதிரடி ஆக்சன் காட்சிகளுடன் வெளியாகி உள்ள இந்த டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 'ஜவான்' திரைப்படம் வருகிற செப்டம்பர் 7-ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.