கணவரின் திருமண பரிசு... நடிகை பூர்ணாவுக்கு சொகுசு வீடு, நகைகள்
|நடிகை பூர்ணாவுக்கு அவரது கணவர் திருமண பரிசாக துபாயில் பெரிய சொகுசு வீடு, தங்க-வைர நகைகளையும் பரிசாக வழங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழில் பரத் ஜோடியாக முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு, அருள் நிதியுடன் தகராறு, சசிகுமாரின் கொடி வீரன் மற்றும் கந்த கோட்டை, துரோகி, ஆடுபுலி, காப்பான், சவரக்கத்தி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பூர்ணா சில தினங்களுக்கு முன்பு துபாய் தொழில் அதிபர் ஷனித் அசிப் அலியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நடிகர்-நடிகைகள் பலரும் வலைத்தளத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். தற்போது கணவருடன் துபாயில் குடியேறி இருக்கிறார்.
இந்த நிலையில் பூர்ணாவுக்கு அவரது கணவர் விலை உயர்ந்த பொருட்களை திருமண பரிசாக வழங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. துபாயில் பெரிய சொகுசு வீடு ஒன்றை பூர்ணாவுக்கு பரிசாக கொடுத்து அசத்தி இருக்கிறார். 1,700 கிராம் தங்க-வைர நகைகளையும் பரிசாக வழங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
பூர்ணா வலைத்தளத்தில் கணவர் குறித்து வெளியிட்டுள்ள பதிவில், நாம் இணைந்து பயணிப்போம். அன்பை குறையாமல் கொடுப்போம். ஒருவர் வளர்ச்சிக்கு ஒருவர் துணையாக இருப்போம் என்று கூறியுள்ளார்.