'மனிதநேயம் நம்ம நாட்டோட அடையாளம்' - ரஜினி பேசிய டப்பிங் வீடியோ வைரல்...!
|நடிகர் ரஜினி தற்போது ‘லால் சலாம்’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.
சென்னை,
ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' படம் சமீபத்தில் திரைக்கு வந்து நல்ல வசூல் பார்த்துள்ளது. தற்போது மகள் ஐஸ்வர்யா இயக்கிய 'லால் சலாம்' படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இதில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து தயாராகி இருப்பதாக கூறப்படுகிறது. ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
அவரது தோற்றம் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இதில் கிரிக்கெட் வீரர் கபில்தேவும் கவுரவ தோற்றத்தில் வருகிறார்.
இந்த நிலையில் 'லால் சலாம்' படத்துக்காக ரஜினிகாந்த் ஸ்டுடியோவுக்கு சென்று டப்பிங் பேசிய வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளார். அதில், ''மதத்தையும், நம்பிக்கையையும் மனசுக்குள்ள வை. மனித நேயத்த மேலே வை. அதுதான் நம் நாட்டோட அடையாளம்'' என்று ரஜினிகாந்த் பேசும் வசனம் இடம் பெற்றுள்ளது. இந்த வீடியோ வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.