< Back
சினிமா செய்திகள்
ஆல்பா திரைப்படத்தில் ஆலியா பட், ஷர்வரியுடன் இணையும் ஹிருத்திக் ரோஷன்?
சினிமா செய்திகள்

'ஆல்பா' திரைப்படத்தில் ஆலியா பட், ஷர்வரியுடன் இணையும் ஹிருத்திக் ரோஷன்?

தினத்தந்தி
|
21 Aug 2024 5:17 PM IST

நடிகர் ஹிருத்திக் ரோஷன் 'ஆல்பா' படக்குழுவினருடன் காஷ்மீரில் படப்பிடிப்பிற்கு செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது.

மும்பை,

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை ஆலியா பட். இவர் தற்போது ஒய்ஆர்எப் ஸ்பை யுனிவர்ஸின் அடுத்த படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு 'ஆல்பா' என்று பெயரிடப்பட்டுள்ளது. ஷர்வரி வாக் உடன் ஆலியா பட் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தினை 'தி ரயில்வே மென்' என்ற தொடர் மூலம் அறியப்பட்ட இயக்குனர் ஷிவ் ரவைல் இயக்குகிறார். மேலும் இப்படத்தினை ஆதித்யா சோப்ரா தயாரிக்க உள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் மும்பை மற்றும் காஷ்மீரில் நடைபெற உள்ளது. ஆக்சன் படமாக தயாராக இந்த படத்தில் பாபி தியோல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், நடிகர் ஹிருத்திக் ரோஷன் 'ஆல்பா' படக்குழுவினருடன் இணைந்து காஷ்மீரில் படப்பிடிப்பிற்கு செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆலியா பட், ஷர்வரி வாக் மற்றும் ஹிருத்திக் ரோஷன் மூவரும் இணைந்து இந்த மாத இறுதியில் காஷ்மீரில் இப்படத்திற்கான படப்பிடிப்பினை தொடங்க உள்ளனர். மேலும் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் படப்பிடிப்பு நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்