< Back
சினிமா செய்திகள்
பைட்டர் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு...!!!
சினிமா செய்திகள்

பைட்டர் படத்தின் 'மோஷன் போஸ்டர்' வெளியீடு...!!!

தினத்தந்தி
|
15 Aug 2023 7:00 PM IST

ஹிருத்திக் ரோஷன்-தீபிகா படுகோன் நடிப்பில் தயாராகி வரும் 'பைட்டர்' படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

மும்பை,

பாலிவுட்டில் முன்னணி நடிகர், நடிகையாக வலம் வருபவர்கள், ஹிருத்திக் ரோஷன் மற்றும் தீபிகா படுகோன். தற்போது இருவரும் இணைந்து 'பைட்டர்' எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தில் நடித்து வருகின்றனர். இவர்களுடன் இணைந்து நடிகர் அணில் கபூரும் நடிக்கிறார்.

மூவரும் இந்திய விமானப்படை அதிகாரிகளாக நடித்து வருகின்றனர். இந்த படத்தை வார், பதான் மற்றும் பேங் பேங் போன்ற படங்களை இயக்கி பிரபலமான டைரக்டர் சித்தார்த் ஆனந்த் இயக்குகிறார். இவர் ஹிருத்திக் ரோஷனுடன் மூன்றாவது முறையும், தீபிகா படுகோன் உடன் இரண்டாவது முறையும் இணைகின்றார்.

சுதந்திர தினமான இன்று அவர்கள் வாழ்த்து தெரிவித்து, தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'பைட்டர்' படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அது தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்தப் படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 25-ந்தேதி திரைக்கு வர உள்ளது.

View this post on Instagram

A post shared by Hrithik Roshan (@hrithikroshan)

மேலும் செய்திகள்