அரண்மனை 4: தமன்னாவுக்கு இத்தனை கோடி சம்பளமா?
|இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை 4 படத்தில் தமன்னா நடித்துள்ளார்.
சென்னை,
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. இவர் தற்போது இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை 4 படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் முந்தைய மூன்று பாகங்களில் நடித்துள்ள சுந்தர்.சி இந்த பாகத்திலும் நடித்துள்ளார். மேலும் இதில் ராஷி கன்னா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.
கடந்த 3 -ந்தேதி 'அரண்மனை 4' படம் திரையரங்குகளில் 'ரிலீஸ்' செய்யப்பட்டது. இப்படம் வெளியான திரையரங்குகளில் "ஹவுஸ்புல்" காட்சிகளாக ஓடிக் கொண்டு இருக்கிறது. இப்படம் வெளியாகி 4 நாட்களில் இந்தியாவில் ரூ.19.15 கோடியும் உலகம் முழுவதும் ரூ.22 கோடியும் வசூல் செய்துள்ளது.
இந்நிலையில், நடிகை தமன்னா அரண்மனை 4 படத்தில் நடிக்க 4 முதல் 5 கோடி ரூபாய் வரை சம்பளம் பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் முன்னதாக நடித்த ஜெயிலர் படத்திற்கு ரூ. 3 கோடி சம்பளம் பெற்றதாகவும் தெரிகிறது. மேலும், 2018-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் தொடக்க விழாவில் நடனமாடியதற்காக ரூ.50 லட்சம் வாங்கியதாகவும் கூறப்படுகிறது.