< Back
சினிமா செய்திகள்
விஜயின் வாரிசு எப்படி இருக்கு...?
சினிமா செய்திகள்

விஜயின் 'வாரிசு' எப்படி இருக்கு...?

தினத்தந்தி
|
11 Jan 2023 11:13 AM IST

வாரிசு படத்தில் விஜய் பேசும் 5 நிமிடத்தில் ஆட்சியே மாறுது என்ற வசனமும் ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறது.

சென்னை

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் வாரிசு திரைப்படம் தியேட்டரில் வெளியாகியது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

அதிகாலை 4 மணிக்கு முதல் காட்சி வெளியானது. வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாகி உள்ளது. நள்ளிரவில் அஜித்தின் துணிவு ரிலீசான நிலையில், தற்போது விஜய்யின் வாரிசும் ரிலீசானதால் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

விஜய், தனக்கே உரிய பாணியில் நடித்து அசத்தி இருக்கிறார். முதல் பாதியில் அமைதியான அம்மா பாசம் கொண்ட விஜய்யையும் இரண்டாம் பாதியில் ஆக்ஷன், காமெடி, தந்தை பாசம் கொண்ட விஜய்யையும் பார்க்க முடிகிறது.

விஜய் எப்பொழுதும் போல் மிகவும் சார்மிங்காக இருக்கிறார். நடனக் காட்சிகளில் அதகளம் செய்திருக்கிறார். ரசிகர்களுக்குத் தேவைப்படும் இடங்களில் பஞ்ச் வசனங்களை சரமாரியாகத் தெறிக்கவிட்டுக் கைத்தட்டல்களை அள்ளுகிறார். ஆக்சன் காட்சிகளில் பொறி பறக்கச் சண்டையிட்டு ரசிகர்களை சில்லறைகள் சிதற விடச் செய்கிறார்.

வாரிசு படத்தில் விஜய் பேசும் 5 நிமிடத்தில் ஆட்சியே மாறுது என்ற வசனமும் ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறது.

ரசிகர்களின் விமர்சனம் வருமாறு:-

விஜய் அளவுக்கு இல்லை மைக்கேல் ஜாக்சன் அளவுக்கு அஜித் டான்ஸ் ஆடி இருக்காரு

"தளபதி Vera level"



மேலும் செய்திகள்