ஹெலிகாப்டர் உடன் தியேட்டருக்கு வந்த கூல் சுரேஷ்...! "பத்து தல" எப்படி உள்ளது...?..டுவிட்டர் விமர்சனம் இதோ..!
|பத்து தல படம் பார்த்த ரசிகர்கள் டுவிட்டரில் தங்கள் விமர்சனத்தை பதிவிட்டு வருகின்றனர். அதன் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
சென்னை
சிம்பு, கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கவுதம் மேனன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள திரைப்படம் பத்து தல. இதில் நடிகர் சிம்பு ஏஜிஆர் என்கிற கேரக்டரில் நடித்துள்ளார். மணல் மாபியாவை மையமாக வைத்து உருவாகி இருக்கிறது.முன்னதாக பத்து தல படத்தின் டீசர், ட்ரெய்லர், பாடல்கள் எல்லாம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது
இப்படத்தை சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய ஒபிலி என் கிருஷ்ணா இயக்கி உள்ளார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார். பத்து தல திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 450-க்கும் மேற்பட்ட திரைகளில் இப்படம் வெளியிடப்பட்டு உள்ளது. சென்னையில் முதல் காட்சி 8 மணிக்கும், பிற ஊர்களில் 7 மணிக்கும் படம் திரையிடப்பட்டது. காலையிலேயே தியேட்டர் முன் குவிந்த ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், சிம்புவின் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்தும், மேள தாளங்கள் முழங்க இப்படத்தின் ரிலீசை கொண்டாடினர்.
சமூக வலைத்தளத்தில் பிரபலமானவர் நடிகர் கூல் சுரேஷ். சிம்புவின் தீவிர ரசிகரான இவர் பல படங்களில் நடித்துள்ளார்.திரையில் வெளியாகும் படங்களுக்கு முதல் நாள் முதல் காட்சிக்கு சென்று விமர்சனம் செய்வார்.
இந்நிலையில் தற்போது சிம்புவின் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள பத்து தல படத்திற்கு தனது பாணியில் வந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் கூல் சுரேஷ். குறிப்பாக சிம்புவின் தீவிர ரசிகரான நடிகர் கூல் சுரேஷ், பத்து தல படத்தின் முதல் ஷோ பார்க்க ஹெலிகாப்டரில் வருவேன் என கூறி இருந்தார். வீட்டை விற்றாவது ஹெலிகாப்டரில் வருவேன் என ஆவேசமாக பேட்டியும் அளித்திருந்தார். ஆனால் இன்று கையில் பொம்மை ஹெலிகாப்டர் ஒன்றை தூக்கிக்கொண்டு பத்து தல FDFS பார்க்க வந்துள்ளார் கூல் சுரேஷ். தியேட்டருக்குள் பொம்மை ஹெலிகாப்டர் உடன் வந்த நடிகர் கூல் சுரேஷை ரசிகர்கள் சூழ்ந்துகொண்டனர். இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனிடையே பத்து தல படம் பார்த்த ரசிகர்கள் டுவிட்டரில் தங்கள் விமர்சனத்தை பதிவிட்டு வருகின்றனர். அதன் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
படம் பார்த்த நெட்டிசன் பதிவிட்டுள்ளதாவது :
பத்து தல படத்தில் சிம்புவின் நடிப்பு கிளாஸ் ஆக இருக்கிறது. ஒபிலி என் கிருஷ்ணாவின் திரைக்கதை நல்ல டுவிஸ்ட்டுகள் நிறைந்து விறுவிறுவென இருக்கிறது. குறிப்பாக இரண்டாம் பாதியில் வரும் ஸ்டண்ட் காட்சிகள் வேறலெவல். கவுதம் கார்த்திக்கிற்கு நல்ல கேரக்டர் சிறப்பாக நடித்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு பதிவில், பத்து தல சீட் நுனியில் பார்க்கும் அளவுக்கு விறுவிறுப்பாக உள்ளது. சிலம்பரசனின் நடிப்பு நெருப்பாக உள்ளது. கண்டிப்பாக என்ஜாய் பண்ணலாம். ஏ.ஆர்.ரகுமானின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம். அது பாசிடிவ் ஆக அமைந்துள்ளது. கவுதமிற்கு நேர்த்தியான ரோல். முதல் பாதியும், இரண்டாம் பாதியும் அதகளமாக உள்ளது. பத்து தல சிம்புவுக்கு ஹாட்ரிக் படமாக அமைந்துள்ளது என பதிவிட்டுள்ளார்.
ஒரு ரசிகர் பெரிய பாசிட்டிவ் முதல் பாதி. முதல் பாதியில் செம்ம வேகம். படம் ஆரம்பிச்சதும் தெரியல முடிஞ்சதும் தெரியல. சிலமபரசன் ஒரு ஒன் மேன் ஆர்மி ஒளிப்பதிவுக்கு பெரும் கைதட்டல் என கூறி உள்ளார்.