< Back
சினிமா செய்திகள்
இந்தியன் 2 எப்படி இருக்கு? - ரஜினிகாந்த் சொன்ன பதில்

கோப்புப்படம் 

சினிமா செய்திகள்

'இந்தியன் 2' எப்படி இருக்கு? - ரஜினிகாந்த் சொன்ன பதில்

தினத்தந்தி
|
22 July 2024 3:49 AM IST

'கூலி' திரைப்படம் நன்றாக வந்து கொண்டிருக்கிறது என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.

சென்னை,

நடிகர் ரஜினிகாந்த், கேரளாவில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு கொச்சியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவரை ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்றனர். அவருடன் செல்பி எடுக்கவும் ஆர்வம் காட்டினர்.

பின்னர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் பேட்டியளித்தார். அப்போது அவரிடம் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான 'இந்தியன் 2' திரைப்படம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், "இந்தியன் 2 திரைப்படம் நன்றாக வந்துள்ளது" என்று கூறினார்.

மேலும் அவர், "கூலி திரைப்படம் நன்றாக வந்து கொண்டிருக்கிறது. 'வேட்டையன்' திரைப்பட பணிகள் நன்றாக போய்க்கொண்டு இருக்கிறது" என்றும் தெரிவித்தார். தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த், காரில் ஏறி புறப்படுவதற்கு முன்பு ரசிகர்கள், அவரது காரின் அருகே வந்து புகைப்படம் எடுப்பதற்காகவும், அவருடன் செல்பி எடுப்பதற்காகவும் முண்டியடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்